அரசியலில் குதித்த பிரபல நடிகரின் மகள் !
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவுள்ளதாக சென்ற வருட இறுதியில் அறிவித்தார் இது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரஜினி விரைவில் அரசியல் கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவிப்பார் என்ற எதிரிபார்ப்பு இருந்துவரும் நிலையில், சமீபத்தில் இமயமலைக்கு தன் ஆன்மீக பயணத்தை துவங்கினர்.
ரஜினியின் கட்சிக்கு மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் தேர்வு செய்யும்பணி தற்போது நடந்துவரும் நிலையில், விரைவில் ரஜினியின் மகள் சௌந்தர்யாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
நேருவுக்கு இந்திரா காந்தி வலதுகையை போல செயல்பட்டது போல ரஜினிக்கு சௌதர்யா இருப்பார் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.