நாக சைதன்யாவுடனான டேட்டிங் வதந்திகள் குறித்து சோபிதா துலிபாலா இறுதியாக பேசியுள்ளார்.
நடிகரும், சமந்தாவின் முன்னாள் கணவருமான நாக சைதன்யா பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் டேட்டிங் செய்து வந்ததாக கடந்த ஆண்டு வதந்திகள் கிளப்பியது. இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள், சில இணையத்தில் வைரலானதே இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வந்ததாக பரவும் வதந்திக்கு காரணம் என்று கூறலாம்.
இந்நிலையில், நடிகை சோபிதாவும் நடிகர் சைதன்யாவும் எந்த ஒரு நேர்காணல்களிலும் தங்கள் வதந்தியான உறவைப் பற்றி வாய் திறக்காமல் இருந்த நிலையில், நடிகை சோபிதா ஹைதராபாத்தில் ஒரு தனியார் நிகழ்வில் கலந்துகொண்டபோது இந்த வதந்திகளைப் பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய சோபிதா ” எனக்கு சினிமா துறையில் ஆர்வம் மிகவும் அதிகம். நான் என்னுடைய கேரியரில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அறிவு இல்லாமல் பேசுபவர்களுக்கு, நான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யாதபோதும், அது என்னுடைய தொழில் அல்லாதபோதும் விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை” என கூறியுள்ளார்.
மேலும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது குறித்து பேசிய அவர் ” இந்த மாதிரி நல்ல படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. மணிரத்னம் சார் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் சார் இசையில் நடித்தது எனக்கு மிகவும் பெரிய விஷயம்” என கூறியுள்ளார்.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…