இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் நடிகர் நானி தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் “தசரா“. இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமையைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தற்போது தசரா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. அதைப்போல நானியின் அசுரத்தனமான நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. டிரைலரை பார்த்த பலரும் படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஆகும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
தசரா ட்ரைலரை பார்த்து நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்த விமர்சனங்கள்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…