நானி – கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தசரா’ படத்தின் மிரட்டலான டிரைலர் வெளியீடு..!

Default Image

இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா என்பவர் இயக்கத்தில் நடிகர் நானி தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம்  “தசரா“. இந்த திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும்,  சமுத்திரக்கனி, தீக்ஷித் ஷெட்டி, ஷைன் டாம் சாக்கோ, ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

Keerthy Suresh Dasara
Keerthy Suresh Dasara [Image Source: Google ]

இந்த திரைப்படத்திற்கு இசையமையைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம். கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வரும் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Dasara Trailer on 14th March
Dasara Trailer on 14th March [Image Source : Twitter]

படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, தற்போது தசரா படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. ட்ரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. அதைப்போல நானியின் அசுரத்தனமான நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது. டிரைலரை பார்த்த பலரும் படம் கண்டிப்பாக பிளாக் பஸ்டர் ஆகும் என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

தசரா ட்ரைலரை பார்த்து நெட்டிசன்கள் டிவிட்டரில் தெரிவித்த விமர்சனங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்