ரசிகரை கொடூரமாக கொலை செய்த தர்ஷன்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Published by
பால முருகன்

தர்ஷன் :  கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில்  ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது அதன் அடிப்படையில், 11 பேரை கைது செய்தனர். கைது செய்து விசாரணை செய்த போது சடலமாக இருந்தது சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்றும் அவர் தர்ஷனின் ரசிகர் மன்ற தலைவைர் எனவும் ,  கூலிப்படையை ஏவி நடிகர் தர்ஷன் அவரை கொலை செய்ததாகவும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.

இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் தர்ஷன் கைதாகி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் ‘ரசிகர்கள் தங்கள் ஆஸ்தான நடிகர்களுக்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கும், அதே நடிகர்கள் ரசிகர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கும் பெரிய பாடமாக மாறியிருக்கிறது தர்ஷன், ரேணுகா ஸ்வாமி வழக்கு’ என்று கூறியுள்ளார். 

நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கடா அவர்கள் மனித புனிதர்கள் அல்ல என்பதற்கு கன்னட நடிகர் தர்ஷன் பெரும் உதாரணம்… என மற்றோருவர் கூறியுள்ளார். 

தொடர்ச்சியாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்தும் தர்ஷனுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துகொன்டு வருகிறது. மேலும், நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைதாகி இருப்பதால், அவர் வைத்து இருந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும்படி, போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்… ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை  ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…

5 hours ago

தவறான செய்தி கொண்ட வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி… கிரியேட்டர்களுக்கு செக் வைத்த யூடியூப்.!

டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…

5 hours ago

தனியா வந்தாலும் சரி, மொத்தமா வந்தாலும் சரி… “2026ல் திமுக கூட்டணிக்குதான் வெற்றி” – மு.க.ஸ்டாலின்!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…

7 hours ago

தை அமாவாசை 2025 இல் எப்போது?.

தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…

8 hours ago

பாப்கார்ன்களுக்கு 18% ஜி.எஸ்.டி ஏன்? நிர்மலா சீதாராமன் கொடுத்த விளக்கம்!

ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று  நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…

10 hours ago

நிதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு – டிஜிபி உத்தரவு!

சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…

11 hours ago