ரசிகரை கொடூரமாக கொலை செய்த தர்ஷன்? கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
தர்ஷன் : கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷன் சித்ரதுர்காவை சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமி, 33 என்பவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9-ஆம் தேதி பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து, விசாரணை செய்ய தொடங்கிய காவல்துறையினர் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை செய்த போது அதன் அடிப்படையில், 11 பேரை கைது செய்தனர். கைது செய்து விசாரணை செய்த போது சடலமாக இருந்தது சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்றும் அவர் தர்ஷனின் ரசிகர் மன்ற தலைவைர் எனவும் , கூலிப்படையை ஏவி நடிகர் தர்ஷன் அவரை கொலை செய்ததாகவும் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது.
இதனையடுத்து, இந்த கொலை வழக்கில் தர்ஷன் கைதாகி இருக்கும் நிலையில், சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். நெட்டிசன் ஒருவர் ‘ரசிகர்கள் தங்கள் ஆஸ்தான நடிகர்களுக்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கும், அதே நடிகர்கள் ரசிகர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கும் பெரிய பாடமாக மாறியிருக்கிறது தர்ஷன், ரேணுகா ஸ்வாமி வழக்கு’ என்று கூறியுள்ளார்.
நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கடா அவர்கள் மனித புனிதர்கள் அல்ல என்பதற்கு கன்னட நடிகர் தர்ஷன் பெரும் உதாரணம்… என மற்றோருவர் கூறியுள்ளார்.
ரசிகர்கள் தங்கள் ஆஸ்தான நடிகர்களுக்காக என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கும், அதே நடிகர்கள் ரசிகர்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கும் பெரிய பாடமாக மாறியிருக்கிறது தர்ஷன், ரேணுகா ஸ்வாமி வழக்கு
தயவு செஞ்சு அவனுங்கள நம்பாதீங்கடா..
இது எல்லாருக்கும் பொருந்தும்டா. 🥹#Dharshan— Raga Pradeepan (@ragapradeepan) June 26, 2024
நடிகனை நடிகனாக மட்டும் பாருங்கடா அவர்கள் மனித புனிதர்கள் அல்ல என்பதற்கு கன்னட நடிகர் தர்ஷன் பெரும் உதாரணம்…
தர்ஷனின் ரகசிய காதலியாக அறியப்பட்ட பெண்ணை தன் ஆதர்ஷ நாயகனை விட்டு விலகுமாறு Social media வில் தொடர்ச்சியாக Harassment செய்த ரசிகரை கொடூரமாக கொலை செய்துள்ளார் தர்ஷன்… pic.twitter.com/8Slkt6v5Hn
— Kari (@WolfsGhost) June 26, 2024
நடிகர் தர்ஷன் தன் ரசிகரை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இறந்தவரின் ஒரு போட்டோ வெளியாகி இருக்கு. ஒரு சீரியல் கில்லர்/தீவிரவாதி கொன்ன மாதிரி இருக்கு. அநியாயம் 😤.
Once you see it, you can’t unsee it. pic.twitter.com/kt4cWK5b4q
— Prabu Krishna (@nkprabu) June 26, 2024
தொடர்ச்சியாக தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இருந்தும் தர்ஷனுக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துகொன்டு வருகிறது. மேலும், நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைதாகி இருப்பதால், அவர் வைத்து இருந்த இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்யும்படி, போலீஸ் கமிஷனர் தயானந்தா உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.