நடனமாடிய நடிகர் ஜி.வி.பிரகாஷ்! பார்ப்பதற்கு குவிந்த பொதுமக்கள்!
நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் மிக சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் எழில் இயக்கத்தில் உருவாகும் படத்தில், ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தில், இவருக்கு ஜோடியாக ஈஷா ரெபா நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நெல்லையில் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் இப்படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் மற்றும் நகை சுவை நடிகர்கள் நடனமாடியுள்ளனர். இந்த காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நெல்லை தாமிரபரணி ஆற்றுப்பகுதியில், பொதுமக்கள் கூட்டம் கூடியதையடுத்து, அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Song shoot with @actorsathish ????✨ ezhil sir shoot … #tirunalveli .. Dinesh master Choreo pic.twitter.com/PzO5Fln9u2
— G.V.Prakash Kumar (@gvprakash) May 8, 2019