அடடா.! இது நம்ம கோவை சரளாவா.?! ஆளே மாறிட்டாங்க.!
தமிழ் சினிமாவில் “வெள்ளி ரதம்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கோவை சரளா. இந்த படத்தை தொடர்ந்து முந்தானை முடிச்சு, வைதேகி காத்திருந்தாள், ஆகிய வெற்றிப்படங்களில் நடித்தார். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, உள்ளிட்ட முன்னணி காமெடி நடிகர்களுக்கு ஜோடியாக மற்றும் இணைந்தும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக காசுமேல காசு என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது மைனா, கும்கி ஆகிய படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருவதகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில், நீண்ட நாட்கள் ஆகியும் கோவை சரளாவை பார்க்காத ரசிகர்கள் அவரை பார்க்கவேண்டும் என ஆவலுடன் காத்துள்ளனர். அந்த வகையில், ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், கோவை சரளாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒரு வெளியாகியுள்ளது.
ஆம், இயக்குனர் மற்றும் நடிகருமான மனோ பாலா கோவை சரளாவை சந்துள்ளார். அப்போது சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை தனது ட்வீட்டர் பக்கத்தில் மனோ பாலா வெளியிட்டுள்ளார். புகைப்படத்தில் கோவை சரளா ஆளே மாறிப்போய் கூலிங் கிளாஸ் உடன் ஸ்டைலான லுக்கில் இருப்பதால், ரசிகர்கள் நம்ம கோவை சரளா வா இது என கேட்டு வருகிறார்கள்.
Kovai sarala pic.twitter.com/mKUWj9cCeu
— Manobala (@manobalam) April 25, 2022