அடடா எம்.ஜி.ஆர்-ஐ காக்க வச்சிட்டேனே! இது எவ்வளவு பெரிய இழப்பு! வருந்தும் கமலஹாசன்!
நடிகர் கமலஹாசன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். தற்போது இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியினை நடத்தி வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமலஹாசன் எம்.ஜி.ஆர் பற்றி பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “எம்ஜிஆர் உடன் நாளை நமதே படத்தில் நடிக்க வேண்டியது. ஆனால், அப்போது என்னால் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும், அப்படத்தில் நான் நடித்திருந்தால் எம்ஜிஆர் -க்கு தம்பியாக நடித்திருப்பேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், யோசித்து பாருங்கள் அப்போது நான் எம்ஜிஆர் -க்கு தம்பியாக நடித்திருந்தால், இப்பொது உள்ள சூழ்நிலைக்கு அது மிகவும் பிரயோஜனமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.