நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படம் “ஜெயிலர்”. இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தான் தொடங்கி அப்டேட்டுகள் வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்க படுகிறது.
இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை என்றாலும் கூட, படத்தின் இசை வேலையை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த படத்தில் ஏற்கனவே ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ள நிலையில், தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை குறித்த மற்றறொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
இதையும் படியுங்களேன்- அட்டகாசமான போஸ்…. விருமன் நாயகியின் அசத்தலான புகைப்படங்கள்..!
அது என்னவென்றால், ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக முன்னணி நடிகையான தமன்னா நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. முன்னதாக ஐஸ்வார்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது தமன்னா நடிக்கவுள்ளதாக நம்ம தக்க சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…