தாதா சாகேப் பால்கே விருது வென்ற ஷாருக்கான் – நயன்தாரா.!

Dadasaheb Phalke Awards 2024

2024ம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நேற்றிரவு அறிவிக்கப்பட்டன. இதில், ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான விருதும், சிறந்த நடிகைக்கான விருது அதே படத்திற்காக நயன்தாராவிற்கும் வழங்கப்பட்டது.

மும்பையில் நடந்த இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், இயக்குனர் அட்லீ, அவரது மனைவி பிரியா, இசையமைப்பாளர் அனிருத், நடிகை நயன்தாரா மற்றும் ஷாருக்கான் உள்ளிட்ட ‘ஜவான்’ படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தனக்கான விருதினை பெற்ற கொண்டு மேடையில் பேசிய நடிகர் ஷாருக்கான், ‘விருதுகளை விரும்புபவன் நான். அதன்மேல் எனக்கு சிறிதளவு பேராசையும் உண்டு. தொடர்ந்து கடுமையாக உழைத்து மக்களை மகிழ்விப்பேன்’ என்றார்.

மார்க்கெட்டும் போச்சு தேதியும் போச்சு! ‘லால்சலாம்’ படத்தால் நொந்து போன விஷ்ணு விஷால்!

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் உருவான ‘ஜவான்’ திரைப்படம் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமானார். ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.1,100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இதன் மூலம் இப்படம் 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த படங்களில் ஒன்றாக மாறியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi