தாதா 87 படக்குழுவினரின் முக்கிய அப்டேட் !!!!
- விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளி வந்தபடம் தாதா87.
- இத்திரைப்படம் தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் வெளி வந்தபடம் தாதா87. இந்நிலையில் இந்த படத்தில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ் பல்லவி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் தாதா 87 திரைப்படம் கடந்த மார்ச் 1 ந் தேதி வெளியானது. இந்த படத்தை கலை சினிமாஸ் தயாரித்துள்ளது.
தற்போது “தாதா 87” படத்தின் படக்குழு இப்படம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தாதா 87 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படக்குழு பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துஉள்ளது.
மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் “பவுடர்” என்ற பெயரில் விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.