அப்பா சம்பாதிக்கிறாரு நாம ஏன் நடிக்கணும்? கோடியில் புரளும் 7 ஜி ஹீரோ!
நடிகர் ரவி கிருஷ்ணா தமிழ் சினிமாவில் 7 ஜி ரேம்போ காலனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரவி கிருஷ்ணா சுக்ரன், பொன்னியின் செல்வன், ஆரண்ய காண்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் 7 ஜி ரேம்போ காலனி ஹிட் கொடுத்த அளவிற்கு வேறு எந்த படங்களும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை என்றே கூறலாம்.
இந்நிலையில், ரவி கிருஷ்ணா பட வாய்ப்புகள் இல்லாததால் உடல் எடை அதிகரித்து ஆளே மாறிவிட்டார். இதற்கிடையில், நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் ரவி கிருஷ்ணா தன்னுடைய தந்தை ஏ.எம்.ரத்தினம் பணம் அதிகமாக சம்பாதிப்பதால் நாம் என் நடித்துவிட்டு என்று நடிக்காமல் கோடியில் புரளுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நடிகர் ரவி கிருஷ்ணா பஞ்சத்திற்கு நடிகர் ஆனவர். அவருக்கு நடிப்பு எப்போதுமே சுட்டு போட்டாலும் வரவே வராது . இவருடைய அப்பா ஏ.எம்.ரத்தினம் பல வெற்றி படங்களை தயாரித்திருக்கிறார். அவர் தயாரிப்பாளராக ஆவதற்கு முன்பு மேக்கப்ணனாக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கி பிறகு தொடர்ந்து பல பெரிய படங்களை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராக இருக்கிறார்.
தன்னுடைய தந்தை தயாரிப்பாளர் என்ற காரணத்தினால் ரவி கிருஷ்னா செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி படத்தில் நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனது அதன் பிறகு இரண்டு படங்களில் நடித்தார் அந்த படம் சரியாக போகவில்லை. பிறகு அவருடைய தந்தையும் ரவி கிருஷ்ணா வைத்து ஒரு படத்தை தயாரித்தார் அந்த படமும் சரியான லாபத்தை ஈட்ட வில்லை.
ரவி கிருஷ்ணாவுக்கு கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தது ஆனால் நடிக்க வேண்டும் புதிய பாவனைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று கடின உழைப்பு எல்லாம் அவர் எடுக்கவில்லை.ஏனென்றால் அவருடைய தந்தை கோடி கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் நாம எதற்கு கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும் என்று நினைத்து விட்டார். இப்போது கோடியில் புரண்டுகொண்டு இருக்கிறார். இதன் காரணமாக தான் அவர் தொடர்ச்சியாக நடிக்கவில்லை” எனவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் ரவி கிருஷ்ணா அடுத்ததாக நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பும் விரைவில் தொடங்கப்பட உள்ளது.