அப்பா இயக்குனர்- வாரிசு நடிகர்: கோலிவுட்டின் கலக்கல் லிஸ்ட்!
தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களின் வாரிசுகள் நடிகர்கள், பாடகர் என சினிமா துறைக்குள் நுழைவு துண்டு. அதேபோல் பழம்பெரும் இயக்குனர்களின் வாரிசுகள் தமிழ் சினிமாவில் தடம் பதித்து ரசிகர்களை மகிழ்வித்து நடித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் அப்பா நடிகர் அல்லது இயக்குனராக இருந்தாலும், சொந்த திறமை தான் திரைத்துறையில் வெற்றியை பெற்று தருகிறது. அந்த வகையில், பலர் இந்த வரிசையில் இடம்பெற்றுள்ளனர். அவர்களும் முன்னணி நடிகர்களில் ஒருவராக தங்களை நிரூபித்து வருகிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜய்
இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என கலக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய்யின் தந்தையாவார். எஸ்.ஏ.சந்திரசேகர் தான் இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படம் விஜய்யை தமிழ் சினிமாவுக்கு நடிகராக அறிமுகம் செய்தார். இப்பொது, தமிழ் சினிமாவின் உச்ச நட்சித்திரமாக திகழ்கிறார்.
கஸ்தூரி ராஜா – தனுஷ்
இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் இசையமைப்பாளர் என கலக்கும் கஸ்தூரி ராஜா, செல்வராகவன், நடிகர் தனுஷ் ஆகியோரின் தந்தையாவார். தனுஷின் முதல் படமான ‘துள்ளுவதோ இளமை’ திரைப்படத்தை செல்வராகவன் இயக்கியிருந்தாலும், அவரது முதல் படம் என்பதாலும் படத்தின் வியாபாரத்துக்காக இயக்கம் கஸ்தூரி ராஜா என்று போடப்பட்டிருக்கும்.
டி.ராஜேந்திரன் – சிம்பு
நடிகரும், இயக்குனரும், பாடகருமான டி. ராஜேந்தரின் மூத்த மகன் சிலம்பரசன் சிம்பு. அப்பாவே போல் பன்முக திறமை கொண்டவர். சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக்கினாலும், டி. ராஜேந்தர் இயக்கிய ‘காதல் அழிவதில்லை’ என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.
பாக்கியராஜ் – சாந்தனு
பாக்யராஜ் பாசாங்குகளற்ற, யதார்த்தமான இயக்குனர் ஆவார். பாக்யராஜ் படங்களில் நடித்து வந்தாலும், பின்னர் படங்களை இயக்க தொடங்கினார். இவரது மகன் சாந்தனு பாக்யராஜ் ‘சக்கரக்கட்டி’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.
பாரதிராஜா- மனோஜ்
இயக்குனர் அவதாரத்தில் இருந்த பாரதிராஜா, பெரும்பாலும் உணர்வு நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை எடுப்பவர். இவரது மனோஜ் கே பாரதி, ‘தாஜ்மஹால்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார், இந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கினார்.
ஷங்கர் – அதிதி
பிரம்மாண்ட படங்களுக்கு சொந்தக்காரர் இயக்குனர் ஷங்கர் படங்களை தயாரித்தும் வருகிறார். இவர்து மகள் அதிதி ஷங்கர, நடிகர் கார்த்திக்கு ‘விருமன்’திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் நுழைந்தார்.