தபாங் 3 மீண்டும் பிரபு தேவா இயக்கத்தில் உருவாகிறது !!!
‘ தபாங் ‘என்ற இந்தி திரைப்படம் ‘ ஒஸ்தி ‘ என்ற பெயரில் தமிழில் ரீமேக் படமாக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குநர் தரணி இயக்கியுள்ளார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெற வில்லை.
அதன் பின்பு ‘ தபாங் 2 ‘ படம் மீண்டும் இந்தியில் இயக்கப்பட்டது. இந்த படத்தையும் நடிகர் பிரபுதேவா இயக்கியுள்ளார். இந்த படமும் மீண்டும் மாபெரும் வசூல் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து ‘ தபாங் 3 ‘ தற்போது பிரபுதேவா மூன்றாவது பாகத்தை இயக்குகிறார். அவரது சகோதரர் அர்பாஸ் கான் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். இதற்க்கான படப்பிடிப்பு வேலைகள் சில மாதங்களில் தொடங்கவுள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.