உயிருள்ள வரை உஷா…டி.ஆர் பட நடிகர் கங்கா காலமானார்!
தமிழ் சினிமாவின் 80ஸ் காலகட்டத்தில் நடிகராகவும், குணசித்திர கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், திடீர் மாரடைப்பால் காலமானார்.
டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியான ‘உயிருள்ளவரை உஷா’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கங்கா. பிறகு, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து பிரபலமானவர்.
குறிப்பாக, சில படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற கதாபாத்திரத்தை ஏற்று தனது நடிப்பு திறமையால், ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கங்கா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில், நடிப்பில் இருந்து விலகி, திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வந்த கங்கா, தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது. இவரது உயிரிழப்பு தமிழ் திரையுலகை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுருளி ராஜன் மரணித்தது எப்படி? ரகசியத்தை உடைத்த பயில்வான் ரங்கநாதன்!
தற்போது, அவரது மறைவிற்கு, திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், நடிகர் கங்காவின் உடல் அவரது சொந்த ஊரான சிதம்பரம் எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்குகளுக்கு பிறகு, மின் மயானத்தின் தகனம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.