புது பிரச்சனையில் சிக்கிய தமன்னா…சம்மன் அனுப்பிய சைபர் கிரைம்.!

Tamannaah: ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை சட்டவிரோதமாக ஒளிபரப்பிய வழக்கில் நடிகை தமன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
2023 ஐபிஎல் தொடரை ஃபேர்ப்ளே (Fair Play) என்ற செயலியில் ஸ்ட்ரீமிங் செய்தது தொடர்பாக, நடிகை தமன்னாவை நேரில் விசாரிக்க மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சைபர் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இந்த சட்ட விரோத ஸ்ட்ரீமிங்கால், Viacom நிறுவனத்திற்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே சிலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது நடிகை தமன்னாவும் இந்த வழக்கில் சிக்கியுள்ளார்.
இந்நிலையில், மும்பை சைபர் போலீசார் அனுப்பியுள்ள சம்மனில், தமன்னா ஏப்ரல் 29 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக நடிகர் சஞ்சய் தத்துக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது, ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
நடிகர் சஞ்சய் தத் இந்தியாவில் இல்லாததால் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதனால், அவர் தனது அறிக்கையை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தோனியால் 10 ஓவர்கள் களத்தில் நின்று விளையாட முடியாது” – சிஎஸ்கே பயிற்சியாளர் ஓபன் டாக்.!
March 31, 2025
“விஜய் திமுகவுக்கு எதிரி., நான் அவருக்கு எதிரி., எது வந்தாலும் பாத்துக்கலாம்..,” பவர் ஸ்டார் பளீச்!
March 31, 2025