Ritika Singh: சுருள் முடி, கருப்பு உடை! ரசிகர்களின் கண்ணை கவர்ந்த ரித்திகா சிங்!
நடிகை ரித்திகா சிங் தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனையடுத்து, ஓ மணப்பெண்ணே படத்துக்கு பின்பு, கடைசியாக இன் கார் படத்தில் நடித்திருந்தார்.
தற்பொழுது, துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்த ‘கிங் ஆஃப் கோதா’ படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில், இடம்பெற்றிருக்கும் ரித்திகா சிங் மற்றும் துல்கர் சல்மான் ஆகியோரின் “Kalapakkaara” என்ற ஹாட் பாடல் ரசிகர்களை மனதை பெரிதும் கவர்ந்தது.
இதனைத்தொடர்ந்து, வேற எந்த படத்திலும் கமிட்டாகாமல் இருக்கும் ரித்திகா சிங், பட வாய்ப்புக்காக தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தற்பொழுது, வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில், கருப்பு நிற உடையில் ரசிகர்களை கவரும் வகையில், லிப்ஸ்டிக் உடன் போஸ் கொடுத்துள்ளார்.