காக்கா புடிச்சா தான் வாய்ப்பு! சந்தானம் பற்றி லொள்ளு சபா சுவாமிநாதன்!

lollu sabha swaminathan Santhanam

சுவாமிநாதன் : சினிமாவில் நன்றாக நடிக்க தெரிந்து ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் நடித்த பல நடிகர்களுக்கு இப்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து பிரபலமாகி பல படங்களில் காமெடி நடிகராக கலக்கிய நடிகர் சுவாமிநாதனை கூறலாம்.

இவருக்கு சமீபகாலமாக படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றே சொல்லலாம். இந்நிலையில், சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சினிமாவில் காக்கா புடிக்கிறவங்களுக்கு தான் வாய்ப்பு தராங்க என  வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எனக்கு சினிமாவில் வாய்ப்பு வேண்டும் என்றால் நான் சந்தானத்தை காக்க பிடித்திருந்தால் போதும். அப்படி செய்து இருந்தாலே எனக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கும்.

என்னை பார்த்த பலரும் உங்களுக்கும் சந்தானத்துக்கும் இடையே காமெடி காட்சிகள் நன்றாக இருக்கும் பின் எதற்காக உங்களுக்கு அவர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். அவருக்கு ஒரு படத்தில் நான் செட் ஆவேன் என்று தோணுச்சுனா  அவர் படத்தில் நடிக்க என்னை கூப்பிடுவார். ஆனால், சினிமாவில் விடாமுயற்சி என்பது இருந்து கொண்டே இருக்கவேண்டும். தினமும்  வாய்ப்பு தேடி அழைந்து கொண்டு தான் இருக்கவேண்டும்.

ஒரு 10 பேரை பின் தொடர்ந்து அவர்களிடம் பேசவேண்டும். அவர்களை காக்க பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்கிறார்கள். அப்படி காக்க பிடிப்பவர்களுக்காக மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், நான் காக்க பிடிப்பதற்குள் கவிழ்ந்து விடுகிறேன். அதனால் எனக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வரவில்லை. அதை போல, எனக்கு காக்க பிடிப்பது போல் நடிக்க தெரியாது.

சினிமாவில் அப்படி தான் எல்லாரும் நான் நடிப்பதை பார்த்துவிட்டு நீங்கள் எதார்த்தமாக நடிக்கிறீர்கள் என்று தான் சொல்வார்கள். நானும் அதை போல தான் சொல்கிறேன் சினிமாவில் மட்டும் இல்லை நிஜ வாழ்க்கையில் கூட அப்படி தான்” எனவும் சுவாமிநாதன் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
dmk mk stalin annamalai
Pakistan for Champions Trophy defeat
Tamilnadu CM MK Stalin
tvk vijay
PM Modi - Delhi opposition leader Atishi
CM STALIN - Boxing