Cook With Comali : தனியார் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியான ‘குக்கு வித் கோமாளி’ நேற்று இரவு 9.30 மணிக்கு தொடங்கியது.
கடந்த 4 சீசன்களாக வெற்றிகரமாக பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ‘குக் வித் கோமாளி’. சமையலை மையமாக கொண்ட இந்த நிகழ்ச்சி இடை இடையில் நகைச்சுவை கலந்து இந்த நிகழ்ச்சி இருப்பதால் மக்களிடையே தனி வரவேற்பை பெற்று பெற்றி அடைந்தது.
இந்த நிகழ்ச்சிக்கெனவே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது என்றே கூறலாம். அதிலும் சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்ப்பட்ட மக்கள் இந்நிகழ்ச்சிக்கு அடிமை என்றும் கூறலாம். தற்போது இந்த வெற்றிகரமான நிகழ்ச்சியின் 5-தாவது சீசன் நேற்றைய நாள் (ஏப்ரல்-27) மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் இரவு 9.30 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது.
இதில் நடுவராக செஃப் தாமோதரன் இந்த 5-தாவது சீசனிலும் தொடர்கிறார். அதே போல் வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை அவருக்கு பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் நடுவராக, செஃப் தாமோதரனுடன் களமிறங்கி இருக்கிறார். அதே போல இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக ரக்ஷனும், மணிமேகலையும் இடம் பெற்றுள்ளனர். அதே நேரம் சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்கள் இந்த சீசனில் குக்குகளாக களமிறங்கி உள்ளனர்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…