Ajmal About Goat[file image]
Ajmal Ameer : விஜய் நடித்து கொண்டிருக்கும் ‘தி கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்து வரும் படமான ‘தி கோட்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தான் அஜ்மல் அமீர். இவரை நமக்கு ‘கோ’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர் என்று நமக்கு தெரியும். இவர் தற்போது விஜய் நடித்து வரும் ‘தி கோட்’ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மேலும், மறுபக்கமான சமூகத்தளத்தில் விஜய் நடிக்கும் கோட் படத்தில் சிஎஸ்கே வீரர்கள் கேமியோவில் நடிக்கிறார்கள் என்று சில வதந்திகள் ரசிகர்களால் பகிர்ந்து கொண்டே வரப்பட்டது. இந்நிலையில் இவர் தற்போது ஒரு யூடுப் சேனலுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார். அந்த பேட்டியில் இவர் கோட் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டிருப்பார்.
அப்போது தொகுப்பாளர்கள் இவரிடம் கோட் படத்தில் நீங்கள் தான் வில்லனாக நடிக்கிறீர்கள் என்று சில வதந்திகள் வந்து கொண்டே இருக்கிறதே அப்படியா, என்று கேட்டதற்கு அவர், ” அதை பற்றி நான் இப்போது சொல்ல மாட்டேன், அது இப்போது பகிர்ந்து கொள்ளும் விஷயமும் கிடையாது அதை பற்றி படம் வெளியான பிறகு நாம் பேசுவோம்”, என்று பதிலளித்திருப்பார்.
மேலும், அந்த பேட்டியின் தொகுப்பாளர்கள் கோட் படத்தில் சிஎஸ்கே வீரர்களில் 3 பேர் நடித்துள்ளதாகவும் சில செய்திகள் வந்து கொண்டே இருக்கிறதே, இது உண்மையா? அவர்கள் நடித்திருக்கிறார்களா என்று கேட்டனர். அதற்கு, “அதையும் நான் இப்போது கூற முடியாது, வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் போது தெரிந்து கொள்ளுங்கள்” என்று கூறி இருந்தார்.
இதனால் சிஎஸ்கே மற்றும் விஜய்யின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் அதிகாரப்பூர்வ தகவலுக்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…
சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…
டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…