இருட்டு அறையில் கதறி கதறி அழுதேன்…பிரபல நடிகை வேதனை.!
தமிழ் சினிமாவில் விஷாலுக்கு ஜோடியாக ‘சிவப்பதிகாரம்’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மோகன்தாஸ். இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழில் தடையற தாக்க,குரு என் ஆளு,எனிமி ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்தும் சில தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்தாஸ் புற்றுநோயில் பாதிக்கப்பட்டு இருந்தார். பிறகு அதற்கான சிகிச்சைப்பெற்று புற்று நோய் பாதிப்பில் இருந்து மீண்டார். இந்த நிலையில், புற்று நோயில் இருந்து மீண்ட மோகன்தாஸ் சமீபத்திய பேட்டி ஒன்றில் சற்று சோகத்துடன் பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய மோகன்தாஸ் ” நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் ரொம்பவே பயமாக இருந்தது. இதைப்பற்றி முதலில் என்னுடைய தோழிகளிடம் கூறினேன். அவர்கள் எனக்கு சில விஷயங்களை கூறி தைரியத்தை கொடுத்தார்கள். ஆனாலும் ரொம்பவே எனக்கு பயமாக இருந்தது. இதனால் தனிமையில் ஒரு இருட்டு அறையில் உட்கார்ந்து அழுதேன்.
எப்போதுமே படப்பிடிப்புக்காக கேமராவிற்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் நான் தனிமையை தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டேன். புற்று நோயால் இறந்துவிடுவோமோ என்று பயந்தேன். இதனால் தான் இந்த செய்தியை அனைவருக்கும் தெரியப்படுத்தினேன். அதன் பிறகு மனது கொஞ்சம் அமையதியாக மாறியது” என கூறியுள்ளார்.