நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகம், வசந்த் ரவி, யோகி பாபு என பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
கடைசியாக ‘அண்ணாத்த படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால், இந்த படத்தின் மூலம் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதைபோல் நெல்சனும் கடைசியாக இயக்கி பீஸ்ட் படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்பதால் ஜெயிலர் படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவேண்டும் என்ற நோக்கில் மும்மரமாக படத்தின் வேளைகளில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் ஜெயிலர் படப்பிடிப்பு கடந்த 15-நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நேற்று படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிப்பதாக பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்ச்சர்ஸ் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து, தற்போது ஜெயிலர் படத்தின் மேக்கிங் வீடியோவை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. வீடியோவில் “சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த மிகவும் கெத்தான லுக்கில் இருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் தலைவா…வேற லெவல் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…