படப்பிடிப்பில் கிரேன் விபத்து…நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மான் மகன்.!

Published by
பால முருகன்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் அவரது தந்தையை போலவே, இசையில் ஆர்வம் காட்டி இசையமைப்பாளராக வளம் வந்துகொண்டு இருக்கிறார். அவ்வப்போது, சொந்தமாக இசைக்கச்சேரியும் நடத்தி வருகிறார். அந்த வகையில்,  இதனையடுத்து, நேற்று அமீன் ஒரு பாடலின் படப்பிடிப்பில் பங்கேற்று இருந்தபோது, ஒரு பெரிய கிரேன் விபத்து ஏற்பட்டுள்ளது.

ARAmeen
ARAmeen [Image Source : Google ]

இந்த விபத்தில் கிரேன் விபத்தில் இருந்து ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இது குறித்த புகைப்படத்தையும், தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு அதிர்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ” இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன்.

மூன்று இரவுகளுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, ​​பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன். நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முழு டிரஸ் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. இங்கும் அங்கும் சில அங்குலங்கள் இருந்திருந்தால், சில நொடிகள் முன்னரோ அல்லது பின்னரோ, மொத்த ரிக் நம் தலையில் விழுந்திருக்கும். நானும் எனது குழுவினரும் அதிர்ச்சியடைந்து அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.

ar ameen [Image Source : Google ]

விபத்து குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், நாங்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளோம், இந்த சம்பவம் குறித்த விசாரணையின் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். படப்பிடிப்பு தளங்களில் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரசிகர்களுக்கு செம சர்பிரைஸ்.! போட்டோவோடு வெளியான ‘வாடிவாசல்’ அட்டகாச அப்டேட்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…

23 minutes ago

ரூ.5 லட்சம் பரிசு.., ஒரு சவரன் தங்கப்பதக்கம்! முதலமைச்சர் வழங்கிய தமிழக அரசு விருது லிஸ்ட் இதோ…

சென்னை :  z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…

49 minutes ago

‘மகா கும்பமேளாவில் குளித்தே தீருவேன்’ அடம்பிடிக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி!

அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…

20 hours ago

திருப்பதி கோயிலில் முட்டி போட்டு நேர்த்திக் கடன் செலுத்திய நிதிஷ் ரெட்டி!

திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…

21 hours ago

ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை கிடைக்குமா? அமைச்சர் மூர்த்தி பதில்!

மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…

21 hours ago

பொங்கல் ஸ்பெஷல் : தென்மாவட்ட மக்களுக்காக சிறப்பு ரயில்களை அறிவித்த ரயில்வே!

சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…

22 hours ago