நடிகை நயன்தாராவின் படத்தை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை!
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வளம் வருகிறார். இந்நிலையில், நடிகை நயன்தாராவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கொலையுதிர்காலம். இப்படம் வரும் 14-ம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பாலாஜி குமார், தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும், கொலையுதிர்காலம் என்ற தலைப்பில் திரைப்படத்தை வெளியிடுவது, காப்புரிமையை மீறிய செயல் என்றும், இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, இப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுகுறித்து ஜூன் 21-ம் தேதி பதிலளிக்குமாறு படக்குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.