அனிருத் கிட்ட போயிருக்கலாமா? ராயன் மூலம் விமர்சனங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பதிலடி!
ஏ.ஆர்.ரஹ்மான் : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50-வது திரைப்படமான ராயன் படத்திற்கு இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக இவர்களுடைய கூட்டணியில் வெளியான மரியான், அம்பிகாபதி, கலாட்டா கல்யாண் ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய வெற்றியை பெற்று ஹிட் ஆகி இருந்தது.
எனவே, ஏ.ஆர்.ரஹ்மான் தனுஷின் 50 -வது படத்திற்கு இசையமைத்துள்ள காரணத்தால் படத்தின் பாடல்கள் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது. பாடல்களும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாவதற்கு முன்பு வெளியாகி இருந்தது. இருப்பினும் முதலில் பாடலுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இதன் காரணமாக தனுஷின் 50-வது படத்தின் ஆல்பம் சரியாக இல்லை அவருக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கலாம். தனுஷ் அனிருத்திடம் சென்று இருக்கலாம் என்பது போல விமர்சிக்க தொடங்கிவிட் டார்கள். ஆனால், அதன்பிறகு ராயன் படத்தின் பாடல்கள் மெல்ல மெல்ல ட்ரெண்ட் ஆகவும் தொடங்கியது.
குறிப்பாக ராயன் படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடும் உசுரே வரிகள் மிகவும் ட்ரெண்ட் ஆக ஆரம்பித்துவிட்டது. இதனை தொடர்ந்து படத்தின் பின்னணி இசை கண்டிப்பாக மிரட்டலாக இருக்கும் என ரசிகர்கள் படம் பார்த்த நிலையில், எதிர்பார்ப்புகளை மிஞ்சும் அளவிற்கு தரமான பின்னணி இசையை கொடுத்துள்ளதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
படம் பார்த்த பலரும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு கொடுத்த பின்னணி இசை தான் முக்கிய பலமாக அமைந்துள்ளது. படத்தின் இரண்டாவது ஹீரோ அவர் தான். பாடல்களை படத்துடன் சேர்த்து பார்க்கும்போது மிகவும் அருமையாக இருக்கிறது என்று கூறி.வருகிறார்கள். இதனையடுத்து ரஹ்மான் ரசிகர்கள் அனிருத் கிட்ட போயிருக்கலாமா? அந்த பேச்சுக்கே இடமில்லை என்பது போல கூறிவருகிறார்கள். பாடல் சரியாக இல்லை என விமர்சனங்கள் எழுந்த நிலையில், அதற்கு ராயன் படத்தில் அசத்தலாக பின்னணி இசை கொடுத்து பதிலடி கொடுத்துள்ளார்.