கொரோனா எதிரொலி! தல அஜித்தின் வலிமை படப்பிடிப்பு ரத்து!
சமீப காலமாக கொரோனா வைரஸ் நோயானது உலகையே அச்சுறுத்தி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். முதலில், சீனாவில் பரவிய இந்த நோய் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், மற்ற நாடுகளிலும் இந்த நோய் பரவி வருகிறது.
இதனையடுத்து, நடிகர் அஜித் நேர்கொண்ட பார்வை படத்தினை தொடர்ந்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார். இந்நிலையில், கொரோனா எதிரொலி காரணமாக, ஹைதராபாத்தில் நடைபெற்று வந்த அஜித்தின் வலிமை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.