தலைவர் படம்னு கூட பாக்காம காப்பி! அனிருத்தை கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்!
அனிருத் இசையில் வெளியான வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடல் தேவாரா படத்தில் இடம்பெற்ற தாவுடி பாடலுடைய காப்பி என ப்ளூ சட்டை விமர்சித்துள்ளார்.

சென்னை : பொதுவாகவே, இசையமைப்பாளர் அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் காப்பி சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. அப்படி சர்ச்சைகளில் சிக்கினாலும் பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகி படத்தின் ப்ரோமோஷனுக்கு ஒரு முக்கிய காரணமாகவும், மற்றொரு பக்கம் அமைந்துவிடும். அப்படி தான் தற்போது ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்திலிருந்து வெளியான மனசிலாயோ பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அந்த பாடலின் சாயல், அப்படியே மலையாள பாடலின் சாயலில் இருப்பதாகவும் பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் இதற்கு முன்பு அனிருத் இசையமைத்த தேவாரா படத்தில் இடம்பெற்ற தாவுடி பாடலுக்கு போட்ட பீட்டை எடுத்து அப்படியே வேட்டையன் படத்தின் மனசிலாயோ பாடலுக்கு அனிருத் போட்டுவிட்டார் எனவும் கலாய்த்து வருகிறார்கள்.
அப்படி தான் தற்போது இயக்குனரும், சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே விஜயின் லியோ badass ட்யூனை தேவாராவில் பாட்டாக போட்டுவிட்டு இப்போது, தலைவர் படம் என்றும் பாராமல் அனிருத் தேவாரா பாடலில் இருந்து காப்பி செய்த வேலை” என விமர்சித்துள்ளார்.

லேட்டஸ்ட் செய்திகள்
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!
April 6, 2025