சவுண்ட் ஏத்து! சிறப்பான சம்பவம் செய்த அனிருத்..வெளியான ‘கூலி’ பாடல் ப்ரோமோ!
கூலி படத்தின் முதல் பாடலுக்கான (Chikitu Vibe) பாடலின் ப்ரோமோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சென்னை : இன்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 74-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனைமுன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அவர் நடித்து வரும் படங்கள் அப்டேட்டுகளும் வெளியாகிக்கொண்டு இருக்கிறது.
அப்படி தான் தற்போது திடீர் சர்ப்ரைஸாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் கூலி படத்தில் இருந்து முதல் பாடலான சிக்கிடு வைப் (Chikitu Vibe) பாடலுக்கான முதல் ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளது. பாடலில் வரும் இசை வழக்கம் போல் அனிருத் பின்னி பெடல் எடுத்திருக்கிறார்.
வழக்கமாகவே ரஜினி படங்கள் வந்தது என்றாலே அடி பொலி தான் என்கிற வகையில் மசாலா தூக்கலாக ஒரு பாடலை கொடுத்துவிடுவார். இந்த முறையும் அதனை மிஸ் ஆகாமல் அதிரி புதிரியான இசையில் டி.ஆர். குரலில் ஹம்மிங் வைத்து அறிவுடன் சேர்ந்து அனிருத் இந்த பாடலை பாடியுள்ளார்.
இந்த (Chikitu Vibe) முழு பாடல் இன்னும் வெளியாகவில்லை. ரஜினிகாந்த் பிறந்த நாள் என்பதால் ப்ரோமோ மட்டும் வெளியாகியுள்ளது. விரைவில் முழு பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.