Categories: சினிமா

ஹோட்டல் சாப்பாடு எதிர்பார்த்து பிக் பாஸுக்கு சென்ற கூல் சுரேஷ்? பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்ன வைரல் வீடியோ..

Published by
கெளதம்

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கி ஒரு வழியாக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற கூல் சுரேஷ், கடந்த சீசனை தொடக்கத்தில் ஜி.பி முத்து எவ்வாறு ஜாலியாக வைத்திருந்தாரோ அதேபோல் இந்த சீசனையும் நம்ம கூல் சுரேஷ் தான் ஜாலியாக வைத்திருக்கிறார்.

இதுவரை யாரிடமும் சண்டை போடாமல், எந்தவித சர்ச்சையில் சிக்காமலும் கூலாக விளையாடி கொண்டிருக்கும் கூல் சுரேஷ், பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து இரண்டே நாள் தான் ஆகிறது. அதற்குள் தனது வீட்டின் நியாபகம் வந்துவிட்டதா என்னவோ தெரியவில்லை.

இன்று காலை பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கேமரா முன் நின்று கொண்டு தனது குழந்தைகளுக்கு சில அறிவுரைகளை வழங்கினார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, சீக்கிரம் கிளம்பி ஸ்கூலுக்கு செல்லவும், அம்மா எது செய்து கொடுத்தாலும் அதனை சமத்தா சாப்பிட்டுவிட்டு போகணும் என்று கூறினார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய கூல் சுரேஷ், இந்த வீட்டில் நம்மள சும்மா சமைக்க சொல்லிட்டு பிறகு ஹோட்டலில் இருந்து வரும் நல்ல சாப்பிடுவாங்க போல, அப்பிடின்னு சொன்னங்க. நானும் அப்படி தான் நினைச்சிட்டு இருந்தேன். அதெல்லாம் முற்றிலும் பொய், நாங்க தான் சமைத்து சாப்பிட்டு இருக்கோம்.

அதனால், கண்ணால் காண்பது பொய் , காதல் கேட்பதும் பொய் தீரா விசாரிப்பதை மெய் என்று கூறியதோடு, இத நான் எதுக்கு சொல்கிறேன் என்றால், நம்ம வீட்டில் சாப்பாடு நல்லா இல்லை என்றால், அம்மா – மனைவியிடம் குறை சொல்கிறோம். இப்போ தான் தெரியுது சமைத்து சாப்பிடுவது எவ்வளவு கஷ்டம் என்று.

அதனால என் குழந்தைகளை இருப்பதை சாப்பிட்டுவிட்டு ஸ்கூலுக்கு போங்க. அம்மாகிட்ட சண்டை போடாதீங்க. உங்களுக்காக தான் அப்பாஇங்கே கஷ்டப்பட்டு இருக்கேன், அதற்கு தானே அப்பா கஷ்டப்படுகிறோம் என்று உருக்கமாக அறிவுரை கூறினார்.

Published by
கெளதம்

Recent Posts

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

25 seconds ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

47 minutes ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

2 hours ago

அன்னா கிராம்லிங்க்கு செக்! கண்ணை மூடி கொண்டு வீழ்த்தி அசத்திய மேக்னஸ் கார்ல்சன்!

ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…

2 hours ago

கொல்கத்தாவுக்கு பயத்தை காட்டிய பூரன்! லக்னோ வைத்த பெரிய இலக்கு!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…

3 hours ago

ஒண்ணும் தெரியாம விஜய் பேச வேண்டாம்! பதிலடி கொடுத்த தமிழிசை சௌந்தரராஜன்!

சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…

3 hours ago