சென்னை :TTF வாசன் நாயகனாக நடிக்கும் “மஞ்சள் வீரன்” என்ற புதிய படத்தை இயக்கப் போவதாக இயக்குனர் செல்லம் அறிவித்தது மட்டும்மல்லால், அதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு அண்மையில் வெளியிட்டு இருந்தது.
ஆனால், படம் கிடப்பில் போடப்பட்டது போல் சத்தம் இல்லாமல் இருந்து வந்தது. தற்பொழுது, ‘மஞ்சள் வீரன்’ படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், டிடிஎஃப் வாசனுக்கு பதிலாக கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
unknown nodeCool Suresh is playing Manjal Veeran [File Image]முன்னதாக, கதாநாயகன் தவிர்த்து மற்ற நடிகர்களுடைய போர்ஷன் படமாக்கப்பட்டதாக இயக்குநர் செல்அம் தெரிவித்திருந்தார். மேலும், டிடிஎஃப் வாசன் படப்பிடிப்புக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்காததால், அவரை படத்தில் இருந்து நீக்கியதாகவும் அறிவித்திருந்தார்.
இப்போது, ‘மஞ்சள் வீரன்’ படத்திற்கான படப்பிடிப்பு பூஜை விழாவில், இயக்குநர் செல்லம் உடன் நகைச்சுவை மற்றும் துணை நடிகரான கூல் சுரேஷ் காணப்பட்டார். இதில், TTF வாசன் கதாபாத்திரத்தில் கூல் சுரேஷ் எவ்வாறு நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
ஆனால், இதுவரை படக்குழு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அதே நேரம் போஜன தொடர்பான வீடியோவில், இயக்குநர் இயக்குநர் செல்லம் உடன் கூல் சுரேஷ் கழுத்தில் மாலை அணிந்திருந்தார். விரைவில் ஒரு அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
unknown node