மாநாடு படம் வெளியாகும் போது நடந்த சம்பவங்கள்! கண்கலங்கிய கூல் சுரேஷ்!

str and cool suresh

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ் சிம்புவின் மாநாடு படத்தின் போது ‘சிம்புவின் மாநாடு எல்லாரும் வழியைவிடு” என்ற வசனத்தை பேசியது மூலம் தான் பிரபலமானார். அதன் பிறகு எந்த படங்கள் வெளியானாலும் முதல் ஆளாக திரையரங்கிற்கு சென்று அங்கு அந்த படங்களை பற்றி பெருமையாக பேசி யூடியூப் ஸ்டார் என்ற பெயரையும் வாங்கினார்.

அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்க அதில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வாரம் போட்டியாளர்கள் தங்களுடைய வாழ்வில் நடந்த கஷ்ட்டமான சம்பவங்களை பற்றி மனம் திறந்து மக்களுக்கு தெரிவிக்கலாம் என டாஸ்க் ஒன்றை கொடுத்து இருந்தது.

விருப்பமே இல்லை பணத்துக்காக அதையெல்லாம் ஒப்புக்கொண்டேன்! தமன்னா காதலர் வேதனை! 

அப்போது பேசிய கூல் சுரேஷ் ” சிலம்பரசன் நடித்த மாநாடு படம் முன்னதாக வெளியாவதாக இருந்து சில காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை என கடைசி நேரத்தில் அறிவிப்பு வந்தது. ஒரு ரஜினி, கமல், அஜித், விஜய் ஆகியோர் படங்கள் ரிலீஸ் ஆவதாக கூறி படம் வெளியாகாமல் இருந்துவிட்டால் எந்த அளவிற்கு பேசும்பொருள் ஆகுமோ அதே அளவுக்கு மாநாடு படம் வெளியாவதால் பெரிய பேச்சு எழுந்தது.

அந்த சமயம் பார்த்து என்னுடைய பெயரில் விஷ கிருமி ஒருவர் சமூக வலைத்தளத்தில் கணக்கு ரெடி செய்து சிம்புவை பற்றி தப்பு தப்பாக பதிவுகளை வெளியீட்டு வந்தார். நான் சிம்பு கூட நெருக்கமாக இருந்தவன் என்பதால் நான் சொன்னால் நம்புவார்கள் என்ற காரணத்தால் அந்த விஷ கிருமி அப்படி சிம்புவை பற்றி பதிவிட்டு இருந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் நான் தான் இப்படி செய்கிறேன் என்றே பலரும் நம்பி விட்டார்கள். பிறகு என்னை தேடி சிம்பு ரசிகர்கள் வீட்டிற்கும் வந்துவிட்டார்கள். பின் போலீசில் சொல்லி எனக்கு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டது. அதன் பின் மாநாடு படம் ஒரு வழியாக ரிலீஸ் ஆக போவதாக அறிவிப்பு வெளியானது நான் படம் பார்க்க திரையரங்கிற்கு சென்றுவிட்டேன்.

அதன் பின் மீண்டும் படம் ரிலீஸ் ஆகாது என்பது போல ஒரு செய்தி வெளியானது. பிறகு திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் எல்லாரும் நான் தான் என்னால் தான் இந்த மாதிரி படத்திற்கு பிரச்சனை என்று முறைக்க ஆரம்பித்து பேச தொடங்கிவிட்டார்கள். பிறகு திரையரங்கின் வாசலுக்கு சென்று நான் இல்லை அது என்னுடைய பெயரில் இருக்கும் போலியான கணக்கு என்று சொல்லி புரிய வைத்தேன்.

பின் படம் ரிலீஸ் ஆகிறது என்ற அறிவிப்பு வந்தது மழையும் பெய்தது. அந்த நேரம் தான் என்னுடைய தலைவன் படம் ரிலீஸ் ஆகிறது கடவுளே சந்தோசப்பட்டுவிட்டார் அதனால் மழை வருகிறது என கூறினேன். அதில் இருந்து நான் எல்லா படங்கள் வெளியாகும் போதும் போய் படத்தை பற்றி பேசினேன். அதன் பிறகு எனக்கு நிறைய பேட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்புகளும் கிடைத்தது.

படத்தில் நடிக்கிறீங்களா அப்போ அறைக்கு வாங்க! விசித்ராவை படுக்கைக்கு அழைத்த நடிகர்?

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒரு முக்கிய காரணமே எனக்கு ஏதாவது நல்ல விஷயம் நடக்காத பட வாய்ப்புகளுக்காக மட்டும் இல்லை எதாவது தொழில் செய்யும் தொழிலதிபர்கள் எனக்கு வாய்ப்பு தரமாட்டார்களா என்றும் தான்” என கண்கலங்கி பேசியுள்ளார். இதைப்போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு விசித்ரா தனக்கு நடந்த அட்ஜெஸ்மென்ட் விஷயம் பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
Vijay -Parandur -Airport
tn rains
RepublicDayParade - Chennai
Nei vilakku (1)
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay