Cool Suresh : விளையாட்டு தனமாக தான் பண்ணேன் விபரீதம் ஆயிட்டு! கூல் சுரேஷ் குமுறல்!
நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ள சரக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கூல் சுரேஷும் கலந்துகொண்டார். வழக்கம் போல எல்லா ப்ரோமோஷனிகளிலும் ஏதேனும் வித்தியாசமாக செய்யும் கூல் சுரேஷ் இந்த ப்ரோமோஷனிலும் ஒரு வேலை செய்து சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.
படத்தின் இசை வெளியீட்டு விழாவின் மேடையில் பேசிக்கொண்டிருந்த கூல் சுரேஷ் “எனக்கெல்லாம் மாலை போட்டீர்கள் ஆனால் இதுவரை பலரை வரவேற்று நிகழ்ச்சியை கலகலப்பாக மாற்றிய இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளருக்கு நீங்கள் மாலை போடவில்லையே என தனது கையில் இருந்த பெரிய மாலையை சட்டென்று தொகுப்பாளினிக்கு போட்டுவிட்டார்.
கூல் சுரேஷ் செய்தது தவறு எனவும் பொது இடத்தில் இப்படியா செய்வீங்க? என சமூக வலைத்தளங்களில் கூல் சுரேஷை நெட்டிசன்கள் தீட்டி தீர்த்து வருகிறார்கள். இதற்கிடையில், கூல் சுரேஷ் மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது ” நான் எப்போதும் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் அந்த இடமே கலகப்பாக இருக்கும் அதனால் நான் விளையாட்டாக எதாவது செய்வேன்.
அதைப்போல தான் சரக்கு படத்தின் இசைவெளியீட்டு விழாவில் செய்தேன். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அந்த பெண்ணுடன் இணைந்து நடனம் எல்லாம் ஆடினேன். அந்த பெண்ணை யார் என்று கூட எனக்கு தெரியாது. என்னுடன் நடனம் எல்லாம் ஆடியதால் அவுங்க ரொம்ப ஜாலியானவங்க என்று நினைத்தேன். ஒரு காமெடிக்காக தான் நான் அப்படி செய்தேன்.
விளையாட்டாக நான் மாலைபோட்டேன் அந்த பெண் மிகவும் கோபப்பட்டுவிட்டார். கூல் சுரேஷ் என்றாலே எதாவது கிறுக்கு தனமா பண்ணுவான் என்று தான் நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள் என்பதற்காக இப்படி செய்துவிட்டேன். விளையாட்டாக செய்தது அந்த பெண்ணிற்கு தர்ம சங்கடம் கொடுக்கும் வகையில் அமைந்துவிடும் என நான் எதிர்பார்த்து இப்படிசெய்யவில்லை .
இப்படி நடந்ததற்கு நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். சரக்கு படத்திற்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இந்த விஷயத்திற்கு நான் மட்டும் தான் காரணம். ஏனென்றால் உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து தான் ஆகவேண்டும். இது ஒரு பெண் சம்மந்த பட்ட விஷயம். எனவே அனைவர்க்கும் என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் கேட்டுகொள்கிறேன். என்னுடைய வீட்டிலே இப்படி நீ செய்தது தவறு என்று சொன்னார்கள். இந்த மாதிரி நான் நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” எனவும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.