Cooku With Comali Season 5
Cook With Comali 5 : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சி எப்படி இருக்கிறது என்று ரசிகர்கள் கூறிய விமர்சனத்தை பற்றி பார்க்கலாம்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே கூறலாம். இதுவரை 4 சீசன்கள் ஒளிபரப்பாகி மக்களுக்கு மத்தியில் பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. இதனையடுத்து குக் வித் கோமாளி 5 சீசன் நிகழ்ச்சியும் கடந்த 27-ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
வழக்கமாக இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் இந்த சீசனில் நடுவராக வரவில்லை என்பதே ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது. இருந்தாலும் மற்றவர்கள் இருப்பதால் இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பு பார்த்தனர்.
இந்த சீசனில் சுஜிதா, பிரியங்கா, திவ்யா துரைசாமி, விடிவி கணேஷ், ஸ்ரீகாந்த் தேவா, இர்ஃபான், அக்ஷய் கமல், பூஜா வெங்கட், வசந்த் வாசி மற்றும் ஷாலினி ஜோயா உள்ளிட்ட போட்டியாளர்களாக கலந்துகொண்டு இருக்கிறார்கள்.கோமாளிகளாக புகழ், குரேஷி, ராமர், சுனிதா, வினோத், நாஞ்சில் விஜயன், ஷப்னம், அன்ஷிதா, கேமி உள்ளிட்டோர் உள்ளனர்.
(ஏப்ரல்-27) மிகப்பெரிய எதிர்ப்பார்ப்புக்கு இடையில் இரவு 9.30 மணிக்கு பிரமாண்டமாக தொடங்கியது. நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். நிகழ்ச்சியை பார்த்த ஒருவர் ” குக் வித் கோமாளி 5 முதல் வாரம் பாத்ததுல தோணுனது, மணிமேகலை கோமாளியாகவே இருந்திருக்கலாம். ஆங்கராக மாறி ஸ்கிரீன்ல பாக்கவே முடியல.. மொத்தமா நாலஞ்சு கிளிப்ஸ்லதான் வந்தாங்க.. கவர்ந்தது கோமாளியாக வந்த செல்லம்மா சீரியல் ஹீரோயின் பொண்ணு..அப்புறம் ஸோயா” என கூறியுள்ளார்.
மற்றோருவர் ” குக் வித் கோமாளி 5 சீசன் நேத்தைய எபிசோடு பார்த்ததில் புரிந்தது.. இதுவரை இல்லாதளவு எரிச்சலூட்டும் சீசனாக அமையும்.. குறிப்பாக பிரியங்கா பண்ணும் எரிச்சல்களை தாங்க தனி மனப்பக்குவம் வேண்டும்.. சீனியர் கோமாளி, ஜூனியர் கோமாளி,சூப்பர் சீனியர் கோமாளினு பூராவும் கடுப்பு” என கூறி இருக்கிறார். விமர்சனங்களை வைத்து பார்க்கையில், இந்த சீசன் ரொம்பவே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. வரும் நாட்களிளாவது ரசிகர்களை கவரும் வகையில் எதாவது செய்வார்களா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்திற்கான கூட்டத்தொடர் திங்கள் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்கள்…
ஃபுளோரிடா : சர்வதேச விண்வெளி நிலையத்தில் 286 நாட்கள் சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் ஸ்பேஸ்…
சென்னை : கடந்த வருடம் ஜூன் மாதம் 5ஆம் தேதி ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு…
வாஷிங்டன் : ரஷ்யா உக்ரைன் போரானது நீண்ட மாதங்களான தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஷ்யா,…
ஃபுளோரிடா : கடந்த 2024 ஜூலை மாதம், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ்,…
சென்னை : வரும் சனிக்கிழமை முதல் ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகள் தொடங்க உள்ளன. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்…