இந்த நிலையில், நிகழ்ச்சியில் நடந்த ஒரு விஷயம் சற்று சர்ச்சையாக மாறியுள்ளது. அது என்னவென்றால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாருக்கான் ராம் சரணை அழைக்கும் போது ஜாலியாக பேசிய விஷயம் தான் சர்ச்சையாக வெடித்துள்ளது. மேடையில் நாட்டு நாட்டு பாடலுக்கு ஷாருக்கான் சல்மான் கானுடன் நடனம் ஆடி கொண்டு இருந்தார்.
அப்போது ஷாருக்கான் ராம்சரணை இட்லி, சாம்பார், வடை மேடைக்கு வரவும் என்பது போல அழைத்தார். இந்த நிலையில் பாதியில் இருந்து நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ராம் சரணின் ஒப்பனை கலைஞர் ஜெப ஹாசன் என்பவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “நான் ஷாருக் கான் சாருடைய தீவிர ரசிகை. ஆனால் ராம் சரணை அவர் ‘இட்லி, வடை, சாம்பார்’ என்று ஒரு பெரிய மேடையில் அப்படி அழைத்து சத்தியமாக பிடிக்கவில்லை.
என்னை பொறுத்தவரை இது அவமரியாதையான செயல். அவர் இப்படி கூறியதன் காரணமாக நான் அந்த நிகழ்ச்சியை விட்டு பாதியிலே வெளியேறிவிட்டேன்” என்று பதிவிட்டு இருந்தார். இதனை பார்த்த ராம் சரணின் ரசிகர்கள் பலரும் ஷாருக்கான் ஒரு போது மேடையில் ஒரு நடிகரை இப்படியா அழைப்பீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் ஒரு சிலர் ஷாருக்கான் மற்றும் ராம் சரண் இருவருமே நெருங்கிய நண்பர்கள் எனவே ஜாலியாக நண்பர்கள் என்பதற்காக கூட அப்படி பேசி இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…