பிக்பாஸில் வெடித்த சர்ச்சை! மன்னிப்பு கேட்ட சரவணன்! நடந்தது என்ன?

Published by
லீனா

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் இருந்து, பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா மற்றும் மீராமிதுன் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள சரவணன், தன்னுடைய கல்லூரி நாட்களில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் பயணம் செய்ததாக கூறியுள்ளார். இவரது இந்த கருத்துக்கு கமலஹாசன் எந்த ஓரு கருத்தும் தெரிவிக்கவில்லை. மேலும், பார்வையாளர்களும் இவரது கருத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சரவணனின் இந்த கருத்துக்கு நடிகை சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, திங்களன்று ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில், தன்னை போல யாரும் தவறு செய்ய கூடாது என்றும், அவர் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் சரவணன் கூறியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

ஜன.11 இல் இந்த 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!

சென்னை : கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி சில மாவட்டங்களில்…

6 minutes ago

ஆபாச நடிகை வழக்கு : ஜனவரி 10 டொனால்ட் டிரம்ப்க்கு தண்டனை..நீதிமன்றம் அறிவிப்பு!

அமெரிக்கா : நடந்து முடிந்த தேர்தலில்,  புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் ஆபாச பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம்…

34 minutes ago

குஜராத்: இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் விபத்து… 3 பேர் பலி!

குஜராத் : இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான பயிற்சி ஹெலிகாப்டர் ( ALH Dhruv ) இன்று (ஜனவரி 5)…

2 hours ago

தமிழகத்தில் திங்கள்கிழமை (06/01/2025) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : கே.வடமதுரை, துடியலூர், அப்பநாயக்கன்பாளையம், அருணாநகர், வி.எஸ்.கே.நகர், வி.கே.வி.நகர், என்ஜிஜிஓ காலனி, பழனிகவுண்டன்புதூர், பன்னிமடை, தாளியூர், திப்பனூர், பாப்பநாயக்கன்பாளையம்,…

3 hours ago

கொஞ்சம் வெறுப்பா இருக்கு! தோல்வியை தொடர்ந்து வேதனையாக பேசிய பும்ரா!

சிட்னி : பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்…

3 hours ago

ரூ.12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி!

டெல்லி : வரும் பிப்ரவரி மாதம் டெல்லி யூனியன் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில்…

4 hours ago