பிரபல திரையரங்கின் செயலால் தனுஷ் மற்றும் சிவகார்த்திக்கேயன் ரசிகர்களுக்கு இடையே சர்ச்சை….!!!
டிசம்பர் 21ம் தேதி 6 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த ஆறு படங்களில் தனுஷ் நடித்த மாரி 2 படமும், சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள கனா படமும் வெளியானது.
இந்நிலையில் திருநெல்வேலியில் உள்ள சினிமாஸ் திரையரங்கில் தனுஷின் மாரி 2 படத்தை திரையிட்டிருந்தனர். 3 நாட்களுக்கு பின் இந்த படத்திற்கு வரும் கூட்டம் குறைந்து விட்டது.
இந்நிலையில் நான்கு காட்சிகளில் இரண்டு காட்சிகள் சிவகார்த்திகேயனின் கனா படத்திற்கு கொடுக்கப்பட்டிருப்பதாக இந்த திரையரங்கின் ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். இதனையடுத்து சிவகார்த்திக்கேயன் ரசிகர்கள் இது தொடக்கம் தான் இன்னும் அதிகரிக்கும் என ட்வீட் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, பதிலுக்கு தனுஷ் ரசிகர்கள் ட்வீட் போட, இரண்டு ரசிகர்களுக்கு இடையில் சர்ச்சை கிளம்பியுள்ளது.