தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் மாதம் தொடங்கிய போது, 18 போட்டியாளர்களுடன் மந்தமாக சென்ற நிலையில், சில வாரங்களுக்குப் பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி கொடுத்த ஐந்து போட்டியாளர்களால் நிகழ்ச்சி கலகலப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் நகைச்சுவையும் மறுபக்கம் சண்டையும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த வாரம், ஐஷு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். ஏழாவது வாரமான இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவதற்கான நேரம் வந்துவிட்டது.
இந்த வாரம் அக்ஷயா, விசித்ரா, ரவீனா, மணி சந்திரா, கானா பாலா, ஆர்ஜே பிராவோ, பூர்ணிமா மற்றும் விக்ரம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். ஏற்கனவே, வைல்டு கார்டு என்ட்ரி கொடுத்த அன்னபாரதி உள்ளே நுழைந்த ஒரே வாரத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் .
தற்போது, மற்றொரு வைல்ட் கார்டு போட்டியாளரான பிரபல பாடகர் கானா பாலா இந்த வாரம் வெளியேற்றப்பட உள்ளதாக சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
காலில் விழுந்ததால் தான் கமலுக்கு பிக்பாஸ் வாய்ப்பு! சர்ச்சையை கிளப்பிய பாடகி சுசித்ரா!
ஆம்… இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட எட்டு பேரில், விசித்ரா அதிக வாக்குகளையும், அக்ஷயா, கானா பாலா மற்றும் விக்ரம் குறைந்த வாக்குகளையும் பெற்றுள்ளனர். ஒரு தகவலின்படி, இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஒருவராக இருக்கும் கானா பாலாவின் கதை முடிவுக்கு வருகிறது என்பது போல் தெரிகிறது.
அவர் மூன்று வாரங்களுக்கு முன்பு அக்டோபர் இறுதியில் வைல்ட் கார்டு போட்டியாளராக பிக்பாஸில் நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சரி எது என்னவோ…இது அதிகாரப்பூர்வமா என்பதை நாளைய எபிசோட் வரை காத்திருக்க வேண்டும்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…