சைலண்டாக சம்பவம் செய்யும் கான்ஜுரிங் கண்ணப்பன்! இதுவரை இவ்வளவு வசூலா?

ConjuringKannappan box office

அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர்  என்பவருடைய இயக்கத்தில் நடிகர் சதிஷ் ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் விடிவி கணேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ‘கான்ஜுரிங் கண்ணப்பன்’.

த்ரில்லர் கதை அம்சத்தை கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனங்களை பெற்று வருகிறது.இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம்  8 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்னதாக படத்தின் ட்ரைலர் வெளியாகி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு மலையாள சினிமாவிலும் படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. எனவே, எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் பெரிய அளவில் விமர்சனத்தை பெற்று வரவில்லை என்றாலும் ஒரு அளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

காஞ்சனாவுக்கு டஃப் கொடுத்ததா கான்ஜுரிங் கண்ணப்பன்? திரை விமர்சனம்.!

வசூல் ரீதியாகவும் படத்திற்கு ஒரு சுமாரான ஓப்பனிங் கிடைத்து வருகிறது. அந்த வகையில், படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, முதல் நாளில் 1 கோடி, இரண்டாவது நாளில் 1.56 கோடி, மூன்றாவது நாளில் 1.8 கோடி என மொத்தமாக உலகம் முழுவதும் 4.36 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

படத்தினுடைய பட்ஜெட் மொத்தம் 8 கோடி எனவே, படத்தின் பட்ஜெட்டை தாண்டி வசூலை செய்யவேண்டும் என்ற கட்டாயத்தில் கான்ஜுரிங் கண்ணப்பன் படம் உள்ளது. படத்திற்கு ஒரு அளவிற்கு ஓப்பனிங் கிடைத்து வந்தாலும் வரும் நாட்களில் ‘ஃபைட்டர் க்ளப்’ சபாநாயகன், போன்ற பல படங்கள் வெளியாவதால் கான்ஜுரிங் கண்ணப்பன் வசூல் பாதிக்கப்படும் எனவே அதற்குள் படத்தினுடைய பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Free bus for men - Minister Sivasankar says
Rajat Patidar fined
Governor RN Ravi - Supreme court of India - TN CM MK Stalin
AA22xA6
mk stalin - RN RAVI