காமெடி நடிகர் சதிஷ் நடிப்பில் அறிமுக இயக்குனர் செல்வின் ராஜ் சேவியர் என்பவர் இந்த படத்தின் கதையை எழுதி இயக்கிய திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன். திகில் கலந்த நகைச்சுவைத் கதை அம்சத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் ஆனந்தராஜ், எல்லி அவ்ரம், ரெஜினா கசாண்ட்ரா மற்றும் VTV கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்.
இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திற்கான டிரைலர் பாடல்கள் என எல்லாம் வெளியாகி படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது என்றே கூறலாம்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. விமர்சனத்தை போலவே படத்திற்கு வரவேற்பு ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியான முதல் நாளில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது.
காஞ்சனாவுக்கு டஃப் கொடுத்ததா கான்ஜுரிங் கண்ணப்பன்? திரை விமர்சனம்.!
அதன்படி, கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலகம் முழுவதும் 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த அளவிற்கு படத்தின் வசூலும் முதல் நாளில் கிடைத்துள்ளதால் படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறதாம். தற்போது சென்னையில் வெள்ளம் வந்து மக்கள் வெள்ளத்தால் அவதி பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
எனவே, இந்த சூழலில் அவர்களால் படம் பார்க்கவும் முடியாத காரணத்தாலும் கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தின் வசூல் சற்று குறைவாகவே கிடைத்துள்ளது. வெள்ளம் வராமல் சென்னை இயல்பு நிலையில் இருந்திருந்தால் இன்னுமே இந்த கான்ஜுரிங் கண்ணப்பன் படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…