வாகை சூடிய அஜித்துக்கு பொழியும் வாழ்த்து மழை! பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை.!

வாகை சூடிய அஜித்துக்கு பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்னர்.

Ajithkumar

சென்னை: துபாயில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24H சீரிஸ் கார் ரேஸின் 991 பிரிவில் மூன்றாவது இடம்பிடித்து அசத்தியுள்ளது அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி. இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் அஜித், இந்தியாவிற்கே பெருமை சேர்த்திருக்கிறார்.

இந்த நிலையில், துபாயில் கார் ரெஸ் நடைபெறும் இடத்தில் இருந்த நடிகர் மாதவன் நேரிலேயே வாழ்த்து தெரிவித்துள்ளார். அஜித்தை ஆரத்தழுவி அவருடன் எடுத்துக் கொண்ட வீடியோவை பகிர்ந்து, மிக மிக பெருமையாக இருப்பதாகவும், One and Only Ajithkumar எனவும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.

அந்த வகையில், வாகை சூடிய அஜித்துக்கு பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்னர். கீழே யார் யார் என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

துபாய் 24H கார் ரேஸின் 991 பிரிவில் அஜித்குமார் மற்றும் அவரது குழுவினர் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளனர் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட உலகளவில் பிரபலமான ஒரு விளையாட்டு நிகழ்வில் நமது திராவிட மாடல் அரசின் விளையாட்டுத் துறை லோகோவை தங்களது காரில் ஒட்டி பெருமைப்படுத்தியதற்கு நன்றிகள்.

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்

அஜித் குமார் 414 ஆம் எண் கொண்ட கார் ஓட்டுநராக கலந்து கொண்டார். அவருக்கு ‘ஸ்பிரிட் ஆஃப் தி ரேஸ்’ விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ந்திருப்பதோடு உலக அளவில் இந்தியாவுக்கு புகழ் சேர்கிறது. எனவே அஜித் குமார் அவர்களின் ஆர்வத்தையும், திறமையையும், வெற்றியையும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டி, வாழ்த்துகிறேன்.

செல்வப்பெருந்தகை

இந்திய நாட்டை உலக அரங்கில் பெருமை பெறச் செய்த நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வானதி சீனிவாசன்

அஜித் குமார் அவர்களுக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.தேசத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும் என்கிற எண்ணத்தில் நீங்கள் மேற்கொண்ட விடாமுயற்ச்சி இன்று மிகப்பெரும் வெற்றியாக உங்களிடத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

இயக்குநர் சிவா

உங்களுக்கும் உங்கள் அணிக்கும் என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் அஜித் சார். உங்களுடைய மனஉறுதி மற்றும் விடாமுயற்சி மீது எனக்கு முன்பிருந்த மரியாதை இப்போது மேலும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்திக்கொண்டே இருங்கள் சார்.

 

சிவகார்த்திகேயன்

உங்களின் அசைக்க முடியாத ஆர்வமும், அர்ப்பணிப்பும் எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது. இந்த கார் பந்தயத் தொடரிலும் நீங்கள் வெற்றிப் பெற எனது வாழ்த்துக்கள் அஜித் சார்.

கமல்ஹாசன்

அஜித்குமார் ரேசிங் அணி தனது முதல் பந்தயத்திலேயே அசாதாரண சாதனை படைத்துள்ளது. தனது பல்வேறு ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய மோட்டார் விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க மற்றும் முக்கியமான தருணம்.

நெல்சன் திலீப்குமார்

மிகப்பெரிய வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அஜித் சார், இது ஒரு ஆரம்பம் தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

வெங்கட் பிரபு

கார் ரேஸில் வெற்றி பெற்ற அஜித் குமாருக்கு வாழ்த்துக்கள்.

இயக்குநர் அமீர்

நடிகர் என்கிற எல்லையை கடந்து “விடாமுயற்சி” யால் வெற்றியை ருசித்த கார் பந்தய வீரர்அஜீத்குமார் அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை

நடிகர் அஜித்குமார், எந்த Godfather-ம் இல்லாமல் சினிமாவில் நடித்து மிகப்பெரிய நடிகராக வந்துள்ளார். No Godfather
உதயநிதி ஸ்டாலின் மாதிரி முட்டுக்கொடுக்க சந்தானமும், பின்னால் தயாரிக்க ஸ்டாலின் ஐயா இருந்ததுபோல் இல்லை. தனிமனிதனாக Break எடுத்து சாதனை படைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்