இரவில் நடந்து முடிந்த திருமணம்… நாக சைதன்யா – சோபிதாவுக்கு குவியும் வாழ்த்து!
நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அவர்களுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஐதராபாத்: தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களான நாக சைதன்யா – நடிகை சோபிதாவின் திருமணம் இன்று பிரமாண்டமாக நடந்து முடிந்தது. ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மண்டபத்தில் ஏஎன்ஆரின் சிலை முன் இருவருக்கும் கோலாகலமாக திருமணம் நடந்தது.
தற்பொழுது, திருமண விழாவின் போது, மணமக்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர்களது திருமணம் சுமார் 8 மணிக்கு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#BreakingNews#NagaChaitanya and #SobhitaDhulipala have tied the knot 💥 ❤️@chay_akkineni @sobhitaD #NagarjunaAkkineni #Thandel #Rana #Prabhas #AlluArjun pic.twitter.com/mtEh8JKJdn
— Pakka Telugu Media (@pakkatelugunewz) December 4, 2024
திருமணத்திற்குப் பிறகு, நாக சைதன்யா மற்றும் ஷோபிதா துலிபாலா இருவரும் திருப்பதி கோவில் அல்லது ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று ஆசி பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திருமண விழாவுக்கு அக்கினேனி குடும்பம் பலருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி , சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், பிவி சிந்து, நயன்தாரா, அக்கினேனி மற்றும் டக்குபதி குடும்பம், என்டிஆர், ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடேலா, மற்றும் மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் ஆகியோர் அடங்குவர். இதற்கிடையில், திருமணத்திற்கு முன்பு நாகார்ஜுனாவின் ஜூப்லி ஹில்ஸ் வீடு முற்றிலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.