வாழ்த்துக்கள் மிஸ்டர் அமிதாப்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து!
நடிகர் அமிதாப் பச்சன் பிரபலமான பாலிவுட் நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவர் அதிகமாக பாலிவுட் திரைப்படங்களில் தான் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பலரும் வாழ்த்து கூறி வருகிற நிலையில், தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் ரஜினிகாந்த், “வாழ்த்துக்கள் மிஸ்டர் அமிதாப். இந்த பாராட்டத்தக்க மரியாதைக்கு நீங்கள் தகுதியானவர்.” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.