Rajinikanth Wishes Leo : லியோ வெற்றிக்கு வாழ்த்துக்கள் கண்ணா! லோகேஷுக்கு கால் செய்த ரஜினிகாந்த்!
![vijay and rajini Lokesh Kanagaraj](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2023/10/vijay-and-rajini-Lokesh-Kanagaraj.jpg)
விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தை பார்க்க ரசிகர்களை தாண்டி தமிழ் சினிமாவே ஆவலுடன் காத்திருக்கிறது. ஏனென்றால், இந்த திரைப்படத்தை மாஸ்டர், கைதி, விக்ரம் உள்ளிட்ட ஹிட் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். எனவே, விஜய் ரசிகர்களையும் தாண்டி லோகேஷ் கனகராஜிற்கு இருக்கும் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களும் இந்த படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மன்சூர் அலிகான், மிஸ்கின், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மனோபால், பாபு ஆண்டனி இன்னும் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைபடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வரும் அக்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு பிஸியாக இருக்கிறது. இதற்கிடையில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு கால் செய்து லியோ திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஏனென்றால், அடுத்ததாக லியோ படத்திற்கு பிறகு லோகேஷ் ரஜினிகாந்தை வைத்து தான் படம் இயக்க இருக்கிறார். எனவே, இதன் காரணமாக ரஜினிகாந்த் அவருக்கு போன் செய்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படத்தின் ப்ரோமோஷனில் மும்மரமாக இருந்த லோகேஷ் கனகராஜிற்கு ரஜினிகாந்த் கால் செய்து “லியோ படம் வெளியாகிறது படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் லோகேஷ்” என கூறியதாக லோகேஷ் கனகராஜே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் ரஜினியை வைத்து லோகேஷ்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில், இயக்கும் படத்திற்கு தற்காலிகமாக ‘தலைவர்171’ என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த திரைப்படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.