சூப்பர் ஸ்டாருடன் மோத இருக்கும் பிரபல காமெடி நடிகர் அதிர்ச்சியில் ரசிகர்கள்
யோகிபாபு ஹீரோவாக நடிக்கும் படமும் ரஜினியின் தர்பாரும் ஒரே நாளில் மோத இருக்கிறது.
நடிகர் ரஜினி காந்த் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் போற்ற கூடிய மிக பெரிய நடிகர்.இவருக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் மார்க்கெட் இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
இந்நிலையில் இவர் தற்போது மிகவும் விறு விறுப்பாக “தர்பார் ” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடை பெற்று வருகிறது. இந்த படத்தில் யோகி பாபுவும் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில் நடிகர் யோகிபாபு நாயகனாக “தர்மபிரபு” படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.இதனை தொடர்ந்து யோகிபாபு தற்போது ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில், ராஜசேகர் இயக்கும் ஒரு புதிய படத்தில் கதை ,திரைக்கதை,வசனம் எழுதி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாக இருப்பதாக என படக்குழு அறிவித்துள்ளது. அதேநாளில் ரஜினியின் “தர்பார்” படமும் ரிலீசாக இருக்கிறதாம்.