தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான டி.இமான் தற்போது பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்டு என்பரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக இமான் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இசையமைப்பாளர் டி.இமான் முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்க கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். டி.இமான் தனது இரு குழந்தைகளின் பாஸ்போர்ட்களையும் வைத்திருந்த நிலையில், குழந்தைகளின் பாஸ்போர்ட்டுகள் தொலைந்ததாக கூறி, மோனிகா புதிய பாஸ்போர்ட் பெற முயற்சித்துள்ளார். இது தொடர்பாக, டி.இமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், தலைமை பாஸ்போர்ட் அதிகாரி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் இமானின் முன்னாள் மனைவி மோனிகா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
அமெரிக்கா: ஹே சிரி... இதை செய், ஹே சிரி... அதை செய்... என சொல்லலும் ஆப்பிள் சொந்தகாரர்கள் அந்த சாதனத்தில்…
கோவை: கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த 18 டன் எடை கொண்ட எல்பிஜி டேங்கர் லாரி…
சென்னை :ஜவ்வரிசி வைத்து பஞ்சு போல ரசகுல்லா செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்:…
செங்கல்பட்டு : பக்கத்து வீட்டுக்காரருடன் சண்டை என்றும் இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி செங்கல்பட்டு…
தஞ்சாவூர் : இன்றும் நாளையும், தஞ்சையில் வேளாண்துறை சார்பில், தேசிய உணவு தொழில்நுட்ப முனைவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் வேளாண்மை…
சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…