இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஸ்ணு விஷால், ரஜினிகாந்த், தன்யா பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படம் வரும் 9-ஆம் தேதி மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் லால் சலாம் படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று வந்துள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக பதிவிட்டு இருந்தார்.
லால் சலாம் படத்தில் ஏன் இதை செய்தேன்.? வீடியோ மூலம் விளக்கம் கொடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்.!
அவர் பதிவிட்டு இருந்ததாவது ” தண்ணீர் பிச்சை கேட்டீர்கள் நாங்கள் கொடுத்தோம் அதைப்போல மின்சாரம் கேட்டீர்கள் கொடுக்கிறோம், எங்களுடைய அழகான பெங்களூருவை கொச்சைபடுத்துனீர்கள் அத்தனையும் தாங்கிக்கொண்டோம். இப்படி கெஞ்சிக்கொண்டே இருக்கிறாய் நாங்களும் கொடுக்கிறோம். உங்களுக்கு வெட்கமாக இல்லையா? என கூறியிருந்தார்.
அது மட்டுமின்றி இனிமேல் தமிழ் படங்களில் நடிக்கவே மாட்டேன் எனவும் கூறியிருந்தார். அந்த சமயம் அப்படி சொல்லிக்கொண்டு தற்போது அவர் லால் சலாம் படத்தில் நடித்துள்ளதை பார்த்த நெட்டிசன்கள் கடந்த சில நாட்களாகவே அவரை தீட்டி தீர்த்து வருகிறார்கள்.
இதனையடுத்து, தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் லால் சலாம் கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணன் முன்னதாக பேசியது வைத்து சமூக ஆர்வலர் செல்வம் என்பவர் தன்யா, ரஜினி மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா மற்றும் லைக்கா மீதும் சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில்புகார் அளித்துள்ளார்.
புகாரில் ” லால் சலாம் திரைப்படத்தில் நடித்திருக்கும் தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே, அவர் நடித்துள்ள இந்த லால் சலாம் படத்தை வெளியிட்டால் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படும் . எனவே படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…