தங்கலானுடன் அந்த படங்களை ஒப்பிட்டால் 3% கூட கிடையாது! சியான் விக்ரம் பேச்சு!

நடிகர் விக்ரம் தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை ஸ்டூயோ க்ரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகிறது.
இந்த திரைப்படத்திற்கான டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பா.ரஞ்சித், விக்ரம், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு படம் குறித்து பேசினார்கள். அப்போது பேசிய விக்ரம் இந்த திரைப்படத்தில் நடிக்க தான் மிகவும் கஷ்டப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” உண்மையாகவே சொல்லவேண்டும் என்றால் தங்கலான் திரைப்படத்தில் நடிக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இதற்கு முன்பு நான் நடிக்க மிகவும் கஷ்டப்பட்ட திரைப்படங்கள் என்றால் பிதாமகன், ராவணன், ஐ ஆகிய படங்களை சொல்லலாம். படங்களுடன் தங்கலான் படத்தை ஒப்பிட்டால் 3% கூட கிடையாது. அந்த அளவிற்கு தங்கலான் படத்தில் நடிக்க கஷ்டப்பட்டேன்.
அதைப்போல படத்தில் வரும் காதல் காட்சிகளும் நடிப்பதற்கு மிகவும் சவாலாக தான் இருந்தது. ஏனென்றால், இப்போது இருக்கும் காதல் காட்சிகளில் கூட நடித்துவிடலாம். ஆனால், தங்கலான் படம் அந்த காலத்தில் இருக்கும் படம் என்பதால் படத்தின் காதல் காட்சிகளும் பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாக இருக்கும். எனவே, அந்த காலத்தில் எப்படி காதல் செய்தார்களோ அதே போல தான் நடிக்கவேண்டும்.
எனவே, இது போல காட்சிகளில் நடிக்க நான் மிகவும் கஷ்டப்பட்டேன். இந்த மாதிரி ஒரு படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லா நடிகர்களுக்கும் இது போல நடிக்கும் வாய்ப்பு கிடைக்காது” எனவும் நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார். விக்ரம் இந்த அளவிற்கு படத்தில் நடிக்க கஷ்டப்பட்டேன் என்று கூறியுள்ளது படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
ரத்தம் தெறிக்க KFG-ல் மிரட்டும் சியான்! ‘தங்கலான்’ படத்தின் மிரட்டல் டிரைலர்!
மேலும், தங்கலான் படத்தின் டீசர் இன்று வெளியான நிலையில், டீசரில் வரும் காட்சிகள் எல்லாம் பார்ப்பதற்கு புதுமையாகவும் வித்தியாசமாகவும் இருந்தது. அந்த அளவிற்கு மிரட்டலான காட்சிகள் டீசரில் இடம்பெற்றிருந்தது. இதனால் டீசரை பார்த்த பலருக்கும் படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024