“தல” யை படுதோல்வி அடையச் செய்த “தளபதி” ..!
ஆண்டு தோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர் உள்ளிட்ட திரை துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு BEHINDWOODS இணையதளம் கோல்ட் மெடல் வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டு முதல் மக்கள் அபிமானம் பெற்ற நடிகரை தேர்வு செய்து அவரை கவுரவிக்க BEHINDWOODS முடிவு செய்தது. இதற்காக பேஸ்புக்கில் BEHINDWOODS தேர்தல் நடைபெற்றது.
நேற்று (29.5.2018) BEHINDWOODS இணையதளத்தில் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் காலை ஒன்பது மணிக்கு தேர்தல் தொடங்கியது. இரவு ஒன்பது மணியுடன் வாக்கெடுப்பு நிறைவு பெற்றது. சுமார் 12 மணி நேரம் நடைபெற்ற இந்த தேர்தலில் மற்ற எல்லா நடிகர்களையும் விட அதிக வாக்குகளை பெற்று நடிகர் விஜய் முதலிடம் பிடித்ததுடன் மக்களின் அபிமானம் பெற்ற நடிகர் என்கிற பட்டத்தையும் தட்டிச் சென்றார்.
⚡️ “Peoples Biggest Icon of Tamil Cinema ” by @behindwoods
After 8 Hours, the top 5 are here#Vijay – 1,07,376#Ajith – 34,286#Simbu – 8,032#Suriya – 5,436#Rajini – 3,988https://t.co/YQ9jUzZjEQ
— Behindwoods (@behindwoods) May 29, 2018
ஒட்டு மொத்தமாக நடிகர் விஜய் 1, 07,376 வாக்குகளை பெற்று விஜய் முதலிடம் பிடித்தார். விஜய்க்கு அடுத்தபடியாக அஜித்துக்கு 34,286 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
சுமார் 73 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று அஜித்தை நடிகர் விஜய் தோல்வி அடையச் செய்துள்ளார். மூன்றாவதாக சிம்புவுக்கு 8,032 வாக்குகளும், சூர்யாவுக்கு 5,436 வாக்குகளும் கிடைத்தது. இதனை தொடர்ந்து வரும் 14ந் தேதி நடைபெற உள்ள விழாவில் விஜய் மக்களின் அபிமானம் பெற்ற நடிகர் என்கிற விருதை BEHINDWOODSசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்.
https://twitter.com/Official_AAD/status/1002065527517294592
இதனிடையே வெறும் பேஸ்புக்கில் மட்டும் தேர்தல் நடத்திவிட்டு மக்களின் அதிகாரம் பெற்ற நடிகர் என்கிற விருதை எப்படி விஜய்க்கு கொடுக்கலாம் என்று அஜித் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.