ட்வீட்டரில் ட்ரெண்டாகும் தளபதி விஜயின் விலையில்லா விருந்தாகம்!
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 22-ம் தேதி தளபதி விஜயின் பிறந்தநாள் ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விஜயின் பிறந்தநாள் அன்று, அந்தந்த மாவட்ட விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு அவரது பிறந்த நாள் அன்று, சற்று வித்தியாசமாக, மக்களுக்கு தினமும் காலை 7:35 முதல் 8:35 வரை வரை வரும் 109 நபர்களுக்கு உணவு வழங்குவதற்காக விலையில்லா விருந்தகம் ஒன்றை வடசென்னையில் துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், தற்போது ட்வீட்டரில் விலையில்லா விருந்தகம் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.